இந்திய அணியின் தோல்விக்கு இவர்கள் தான் காரணம் ரிஷப் பண்ட் வேதனை..!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.20 தொடர்
தென் ஆப்ரிக்கா - இந்தியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் இஷான் கிஷன் 76 ரன்களும்,ஸ்ரேயஸ் ஐயர் 36 ரன்களும் எடுத்திருந்தனர்.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தது.
19.1 ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்களும்,வாண்டர் டூசன் 46 பந்துகளில் 75 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ரிஷப் பண்ட் பேச்சு
இந்திய அணி முதல் ஓவரிலேயே தோல்வியை தழுவியது.இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட், பேட்டிங்கிள் நாங்கள் வெற்றி தேவையான ரன்களை நாங்கள் குவித்தோம்.
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான பீல்டிங் திட்டங்களை நாங்கள் சரியாக கையாளவில்லை. எதிர் அணியில் விளையாடிய டேவிட் மில்லர்,வாண்டர் டூசனும் மிகச் சிறப்பாக விளையாடினர்.
எங்களிடம் உள்ள தவறுகளை சரிசெய்து அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.