ரிஷப் பண்ட் செய்த ஏமாற்றுவேலை - புகார் அளித்த தென்னாப்பிரிக்கா கேப்டன்

rishabh pant INDvSAF deanelgar
By Petchi Avudaiappan Jan 05, 2022 12:28 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் மீது  தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கே ஆட்டமிழந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 229 ரன்களுக்கு சுருட்டியது.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 35 ரன்களும், ரஹானே 11 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இதனிடையே தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த தவறு ஒன்று தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்க வீரர் வேண்டர்டுசைன் ஆட்டமிழந்த விதம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

காரணம் பந்து தரையில் பட்டு பிடித்த பின்னரும் பண்ட் அம்பயரிடம் அவுட் கேட்டார். அம்பயரும் அவுட் என்று முடிவை அறிவித்துவிட்டார். பேட்ஸ்மேனும் ரிவியூ கேட்காமல் சென்றுவிட்டார். பின்னர் விக்கெட் விழுந்த உடனே போட்டி உணவு இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடைவேளையில் விக்கெட் ரீபிளேவை பார்க்கும்போது பந்து கீழே பட்டு பிடிக்கப்பட்டது தெளிவாக தெரிந்தது.

ஆனால்  மிக நீண்ட நேரம் எந்தவித அப்பீலும் செய்யாததால் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததாகவே இறுதியில் கூறப்பட்டது. இதன் காரணமாக போட்டி முடிந்ததும் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீன் எல்கர் இந்த விக்கெட் குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.