தமிழக வெற்றிக் கழகம் - கட்சியின் கொடிப் பாடலை இசையமைத்தது யார் தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிப் பாடலை இசையமைத்தவர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
தவெக
கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் கொடி ஏற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 9.15 மணிக்கு கட்சி கொடி அறிமுகமாகிறது. மேலும் இன்று கொடி அறிமுக விழாவை ஒட்டி அதற்காக கம்போஸ் செய்யப்பட்ட சிறப்பு பாடலையும் வெளியிட உள்ளனர்.
கொடிப் பாடல்
விஜய் கட்சிக்கு அந்தப்பாடலை கம்போஸ் செய்தது யார் என்கிற தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அந்த பாடலை இசையமைப்பாளர் தமன் கம்போஸ் செய்துள்ளதாகவும், பாடலாசிரியர் விவேக் அதன் வரிகளை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் தமன் இப்படி அரசியல் கட்சிக்கு பாடல் கம்போஸ் செய்வது முதல்முறை இல்லை. முன்னதாக தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு பாடலை இசைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.