இந்தியாவில் ரூ.15,000க்கு வாடகை மனைவி..எங்கு தெரியுமா?வெளியான அதிர்ச்சி தகவல்!
திருமணம் ஆகாத ஆண்களுக்கு வாடகை மனைவி என்கிற முறை இந்தியாவில் நடைமுறையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடகை மனைவி
தாய்லாந்தில் சுற்றுலா வருபவர்களுக்கு இளம்பெண்களை வாடகை மனைவிகளாக மாறும் கலாச்சாரம் நடைமுறையிலிருந்து வருகிறது. இதனால் அங்கு வருமானமும் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த நடைமுறை, இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் மத்தியப் பிரதேசம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 'தாதிச்சா பிரதா' என்று அழைக்கப்படும் .இந்த முறையில் பெண்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆண்களுக்கு மனைவிகளாக வாடகைக்கு விடப்படுகிறார்கள்.
திருமணம் ஆகாத பணக்கார ஆண்களுக்கு கன்னித்தன்மை, உடல் தோற்றம் மற்றும் வயது போன்றவை அடிப்படையாகக் கொண்டு ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 8 வயது முதல் 15வயதிற்குட்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அதிர்ச்சி
மேலும் அழகான கன்னிப் பெண்கள் என்றால் ரூ.2 லட்சமும், மற்ற சராசரி பெண்களுக்கு 15,000 முதல் 25,000 வரை பணம் வழங்கப்படுகிறது. ஏலம் விடும் பெண்களுக்கும் ஏலத்தில் எடுக்கும் ஆண்களுக்கும் இடையே பத்திர ஒப்பந்தம் போடப்படுகிறது.
ஒப்பந்தத்தின் முடிவில் புதுப்பித்துக் கொள்ளவும் முடியுமாம். இந்த கலாச்சாரம் குறித்து மத்தியப் பிரதேச காவல்துறைக்குத் தெரிந்திருந்தாலும், புகார் தர யாரும் முன்வருவதில்லை என்பதால், சட்ட ரீதியாகத் தடுக்கமுடியவில்லை என்பது வருத்தமான விஷயாக உள்ளது.