தெரியுமா உங்களுக்கு? இந்தியாவில் மிகவும் ஏழ்மையான மாநிலம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!
இந்தியாவில் மிகவும் ஏழ்மையான மாநிலம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியா
இந்தியாவில் ஏழ்மை நிலை என்பது பரவலாகக் காணப்படுகின்றது. இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் மக்கள் அனைத்துலக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். வறுமையை ஒழிப்பதற்கான இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உலக வங்கியின் (World Bank) கணிப்பீட்டின்படி 2005-2006 மற்றும் 2019-2021-க்கு இடையில், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை சுமார் 41.5 கோடி குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.
இந்த நிலையில், நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) ஆகியவற்றால் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மிகவும் ஏழ்மையாக உள்ள மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஏழ்மையான மாநிலம்
அதன்படி, வறுமை ஒழிப்பில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாகப் பீகார் உள்ளது. 2வதுஜார்கண்ட்மாநிலமும் , 3 வதாக உத்தரப் பிரதேசம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தை மேகாலயா பிடித்துள்ளது.
இந்த வரிசையில் கோவாவில் வறுமை வேகமாகக் குறைந்து வருவதாகவும், ஜம்மு காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. இந்த வரிசையில் தமிழ்நாட்டில் 4.89% மற்றும் பஞ்சாபில் 5.59% வறுமை நிலவுகிறது.