பிரதமர் மோடியிடம் கேள்வி; பெண் பத்திரிக்கையாளருக்கு டார்ச்சர் - கடுப்பில் வெள்ளை மாளிகை
பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர் அங்கு செய்தியாளர்களை சந்திக்கையில், பத்திரிக்கையாளர் சப்ரினா சித்திக், இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பிரதமர் மோடி, இந்தியாவில் எந்தவித மத, இன, சாதிப் பாகுபாடுகளுக்கும் இடமில்லை என பதிலளித்தார். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது. அந்த பத்திரிக்கையாளரையும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
வெள்ளை மாளிகை கண்டனம்
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் ஜான் கிர்பி,அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அதில், எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதை வெள்ளை மாளிகை கண்டிக்கிறது.

பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்தச் செயலுக்கு எங்களுடைய கண்டனங்கள் எனத் தெரிவித்துள்ளார்.