அமெரிக்க அதிபர் மனைவிக்கு வைர நெக்லஸ் : பிரதமர் மோடி அளித்த பரிசு

Joe Biden
By Irumporai Jun 22, 2023 04:17 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்க அதிபர் ஜோபைடன் மனைவிக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.

மோடி அமெரிக்க பயணம் 

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அமெரிக்கா சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நடந்த இந்திய நடன கலாச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.

அமெரிக்க அதிபர் மனைவிக்கு வைர நெக்லஸ் : பிரதமர் மோடி அளித்த பரிசு | Pm Modi Gift A Diamond Necklace To Jill Biden

   ஜோ பைடன் மனைவிக்கு பரிசு

அதன்பின்னர் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். 7.5 கேரட் தரத்திலான இந்த வைரம் முழுவதும் ஆய்வகத்தில் செய்யப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனாலும் இயற்கையாக பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வைரங்களுக்கு நிகரான பொலிவையும், ஒளிவீசும் தன்மையையும் இது கொண்டிருக்கிறது.