வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதை அடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவின் 46வது அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் இன்று பதவியேற்றார். இதனையடுத்து முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார் .
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டிக்கொடுத்த டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாவது, 4 ஆண்டுகளாக எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.எனது ஆட்சியில் பெரிய அளவில் வரிகளைக் குறைத்தேன். பைடன் ஆட்சியில் வரிகள் உயரும் என்று நான் நம்புகிறேன்.
வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய டிரம்ப் புளோரொடாவில் உள்ள தனது சொகுசு மாளிகையில் தங்கவுள்ளார். மேலும் அவர் மிகப்பெரிய ரியல் எஸ்டேர் தொழிலதிபர் என்பதால் அத்தொழிலில் அவர் ஈடுபடவுள்ளதாகவும் தெரிகிறது.