விழுப்புரம் சாலையில் நடமாடும் பேய்.. கதிகலங்க வைக்கும் வைரல் வீடியோ - உண்மை என்ன?
விழுப்புரத்தில் பேய் நடமாட்டம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
பேய்..
பேய் இருக்க இல்லையா? நம்பலாம நம்பக்கூடாதா? என்ற கேள்விக்கு இப்போது வரை மவுசு அதிகம். இறந்த ஒருவரின் ஆவிதான் பேயாக வருவதாக நம்பப்படுகிற நிலையில், பேய் என்ற வார்த்தையை கேட்டாலே சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் கூட நடுங்குவார்கள்.
என்னென்றால் சிறு வயதில் இருந்து பேய் பற்றி சிறு வயதில் இருந்து கேட்டு வளர்ந்த கதைகள் அப்படி. இந்த பயத்தை வைத்து தமிழ் படங்கள் முதல் ஹாலிவுட் வரை பல படங்கள் தயாரித்து பணத்தை சம்பாரித்துள்ளனர்.
அந்த வகையில் வெள்ளை உடை உடுத்தி அவ்வப்போது ஓட்டுநர்களை கதிகலங்க வைக்கும் நிகழ்வுகளின் வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வீடியோக்கள் குவிந்து கிடக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
உண்மை என்ன?
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டியில் பேய் ஒன்று நடமாடும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக படு வைரலாக பரவி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உள்ளனர். இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் செல்லவே பயந்து நடுங்கினர்.
இந்த வீடியோ உண்மையா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருந்தது. இதற்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, பேய் நடமாடுவதாக பரப்பப்படும் புகைப்படம் மற்றும் காணொளி கடந்த ஜூலை மாதம் உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதியில் நடந்ததாக கூறி பரவிய வீடியோ என தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்திய அம்மாநில போலீசார் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் சம்பவம் பொய்யானது என விளக்கம் அளித்தனர். தற்போது அதே வீடியோ விழுப்புரத்தில் நடப்பதாக பரவும் வீடியோ முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளனர்.