அசைவம் சாப்பிடுவோர் எந்த மாநிலத்தில் அதிகம்? தமிழ்நாடு இல்லையாம்..

Tamil nadu India Junk Food Fast Food
By Sumathi Jun 30, 2025 02:00 PM GMT
Report

இந்தியாவில் அதிகம் அசைவம் சாப்பிடும் மாநிலம் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

சைவம்

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 தரவுகளின்படி, இந்தியாவில் 70 சதவீதப் பெண்கள் மற்றும் 78 சதவீத ஆண்கள் அசைவம் உண்பவர்களாகவே உள்ளனர். ராஜஸ்தானில் அதிகபட்சமாக மக்கள் தொகையில் 75% சைவ உணவு சாப்பிடுவோராக உள்ளனர்.

அசைவம் சாப்பிடுவோர் எந்த மாநிலத்தில் அதிகம்? தமிழ்நாடு இல்லையாம்.. | Which States Has Highest Non Veg Population India

ஹரியானாவில் இந்த எண்ணிக்கை 70%ஆக இருக்கிறது. பஞ்சாப்பில் 67%, குஜராத்தில் 61%ஆக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 40%, மத்தியப் பிரதேசத்தில் 51%, உத்தரப் பிரதேசத்தில் 47%ஆக சைவர்கள் உள்ளனர்.

மாட்டு மூளையுடன் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் - வெடிக்கும் ஆர்ப்பாட்டம்

மாட்டு மூளையுடன் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் - வெடிக்கும் ஆர்ப்பாட்டம்

அசைவம்

கர்நாடகாவில் சைவர்கள் எண்ணிக்கை 21%ஆகவும், சத்தீஸ்கரில் இந்த எண்ணிக்கை 18%ஆக உள்ளது. எங்கும் சைவர்களின் எண்ணிக்கை 10% கூட தாண்டவில்லை. தமிழகத்தில் அது 2.3%ஆக இருக்கிறது. தொடர்ந்து கேரளாவில் அது 3%ஆக மட்டும் இருக்கிறது.

non veg

தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், நாகாலாந்து, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 97 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

பஞ்சாப், ஹரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. பொதுவாகவே வருமானம் அதிகரிக்கும்போது இந்தியாவில் இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.