நீங்க எதிர்பார்த்தது இல்ல.. இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அசைவ உணவு
இந்தியாவில் இரண்டு வகையான உணவு பிரியர்கள் உள்ளனர். ஒன்று சைவம் மற்றொன்று அசைவம். சைவம் பிரியர்களைக் காட்டிலும் இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவை விரும்பி உண்கின்றனர். அதன்படி , எந்த மாநிலத்தில் அதிகம் அசைவம் சாப்பிடும் மக்கள் உள்ளனர் என தெரியுமா? அது நாகாலாந்து மாநிலம் தான். இங்கு 99.8 சதவீதம் பேர் அசைவ உணவை விரும்பி உண்கின்றனர்.
ஆய்வு தகவல்
2வது இடத்தில் மேற்கு வங்கம் மாநிலம் உள்ளது. இங்கு 99.3 சதவீதம் பேர் அசைவ உணவை விரும்பி உண்கின்றனர். 3வது இடத்தில் கேரளா மாநிலம் உள்ளது. இங்கு 99.1 சதவீதம் பேர் அசைவ உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். 4வது இடத்தில் ஆந்திரா உள்ளது.
98.25 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர். இந்த வரிசையில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது. 97.65 சதவீதம் பேர் அசைவத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்