அதிமுக - 7, பாஜக - 10..? எந்த கூட்டணியை முடிவு செய்யும் பாமக..?

Anbumani Ramadoss Dr. S. Ramadoss ADMK PMK BJP
By Karthick Mar 08, 2024 02:31 AM GMT
Report

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழகத்தில் இந்த மக்களவை தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

which-party-will-pmk-alliance-with-admk-or-bjp

தேமுதிக அதிமுகவுடன் தனது கூட்டணியை உறுதி செய்திட நிலையில், இன்னும் பாமக மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தமிழகத்தில் மேற்கு பகுதிகளால் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமகவின் கூட்டணி அதிமுக, பாஜக இருகட்சிக்குமே தேவைப்படும் ஒன்றாகவே கருதுபடுகிறது.

மத்திய அமைச்சர்

ஆனால், இதில் இறுதி முடிவு என்பது பாமக கட்சியினுடையது தான். பாஜக - அதிமுக என இரு கட்சிகளுடனும் பாமக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளை கேட்டபோதிலும் 7 தொகுதியை அக்கட்சி ஒதுக்க சம்மதிப்பதாக கூறப்படும் நிலையில், ராஜ்யசபா சீட் குறித்தான தகவல்கள் சரியாக கிடைக்கப்பெறவில்லை.

திமுகவில் சரியான மரியாதையே இல்லை - அதிமுக கூட்டணி சென்ற பிரதான கட்சி..!

திமுகவில் சரியான மரியாதையே இல்லை - அதிமுக கூட்டணி சென்ற பிரதான கட்சி..!

கடந்த முறையும் அதிமுக கூட்டணியில் தான் இடம் பிடித்திருந்த பாமக 7 தொகுதியில் தான் போட்டியிட்டது. அதே நேரத்தில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் 7 முதல் 10 இடங்களை பாமக கேட்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

which-party-will-pmk-alliance-with-admk-or-bjp

மத்தியில் மீண்டும் பாஜகவின் ஆட்சியே அமையும் என நம்பும் பட்சத்தில், அக்கூட்டணியில் இடம்பெற்றால் மத்திய அமைச்சர் பதவி ஏதேனும் பெறலாம் என்ற நோக்கத்தில் பாஜகவின் கூட்டணிக்கு அன்புமணி ராமதாஸ் இசைவதாக கூறப்படுகிறது.

which-party-will-pmk-alliance-with-admk-or-bjp

ஆனால், அதே நேரத்தில் தலைவர் ராமதாஸ், அதிமுக கூட்டணியில் இடம்பெறவே விரும்புவதாகவும், அதன் ஒரு வெளிப்பாடு தான் ராமதாசை அவரது இல்லத்தில் அதிமுகவின் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்து பேசியது எல்லாம் என்றும் கருத்து பேசப்பட்டு வருகின்றது. இன்னும் ஓரிரு நாளில் இதில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் நம்பப்படுகிறது.