திமுகவில் சரியான மரியாதையே இல்லை - அதிமுக கூட்டணி சென்ற பிரதான கட்சி..!
திமுக - அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணி தங்களது கூட்டணியில் மதிமுக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணியை உறுதிசெய்திட்ட நிலையில், இன்னும் விசிக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி உறுதியாகவில்லை.
இந்த சூழலில் தொகுதி ஒதுக்கீட்டில் பிரச்சனை இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது திமுக கூட்டணியில் இருந்த முக்கிய கட்சி ஒன்று அதிமுக கூட்டணி சென்றுள்ளது.
அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்துள்ளார்.
அதிமுக கூட்டணியில்..
சந்திப்பின் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அளவில் இந்திய கூட்டணியில் தான் தங்கள் கட்சி இருந்தாலும், தமிழகத்தில் கட்சி மாநில குழு எடுத்த முடிவின்படி பா.ஜ.க இல்லாத அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் தங்களுக்கு சரியான மரியாதை இல்லை என தெரிவித்த அவர் அதன் காரணமாகவே கூட்டணியில் இருந்து விலகி தங்களை மதிக்கும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணியில் போட்டியிட தேனி அல்லது ராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.