உடலில் அதிகமாக வேலை செய்யும் உறுப்பு.., எது தெரியுமா?

Liver
By Yashini Feb 17, 2026 09:42 AM GMT
Report

மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பி கல்லீரல் ஆகும்.

கல்லீரல் செரித்த உணவை இரத்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்துச் சேமித்து வைக்கும் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது.

கல்லீரல் வலது இடது இழைகள் என இரண்டு பங்காகப் பிரிக்கப்படுகிறது.

நமது உடலில் தொடர்ந்து செயல்படும் முக்கிய உறுப்புகளில் கல்லீரல் அதிகமாக வேலை செய்யும் உறுப்பாகும்.

உடலில் அதிகமாக வேலை செய்யும் உறுப்பு.., எது தெரியுமா? | Which Is The Most Active Organ In The Body

உணவை ஜீரணிக்க உதவுதல், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுதல் மற்றும் ஆற்றலை சேமித்தல் போன்ற முக்கிய பணிகளை கல்லீரல் செய்கிறது.

ஆனால், கல்லீரல் பாதிப்பு ஆரம்ப கட்டங்களில் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாததால் பலர் அதை கவனிக்காமல் விடுகின்றனர்.

இதனால் நோயறிதலில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்கள் அவசியம்.

உடலில் அதிகமாக வேலை செய்யும் உறுப்பு.., எது தெரியுமா? | Which Is The Most Active Organ In The Body

தியானம், யோகா மற்றும் சுவாசப் பயிற்சிகள் மனநலத்தையும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

புதிய காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். 

அதிக எண்ணெய், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பது நல்லது.

மேலும், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சினைகள் அதிகம் காணப்படுவதால், நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.