எந்தெந்த ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம் தந்த விளக்கம்
வாக்காளர்களே உங்களது ஜனநாயக கடமையை ஆற்ற தவறாதீர்கள்.
தேர்தல் வாக்கெடுப்பு
நாட்டின் ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் இன்று துவங்கியுள்ளது. நாட்டில் அடுத்த 5 ஆண்டிற்கு ஆளும் அரசை தேர்வு செய்யும் இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை 40 தொகுதிகளை சேர்ந்து நாட்டில் மொத்தமாக 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.இன்று, சிக்கிம் மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பும் நடைபெற்று வருகின்றது.
அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திரங்கள், பொதுமக்கள் என பலரும் காலை முதலே பெரும் திரளாக தங்களது வாக்கை செலுத்திட வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்றுள்ளனர்.
வாக்காளர் அட்டை இல்லையா..?
18 வயது நிரம்பிய நிலையிலும், சிலர் இன்னும் தங்களது வாக்காளர் அட்டையை பெறாமல் இருப்பார்கள். அதே போல, வாக்காளர்கள் அட்டையை தொலைத்தவர்கள் உள்ளனர்.
இந்த சூழலில் தான், வாக்காளர்கள் அட்டை மட்டுமின்றி, எந்தெந்த ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்பதை இந்த தொகுதியில் காணலாம்.
அரசு அங்கிகாரம் பெற்ற ஆவணங்களான
- ஆதார் கார்டு,
- ஓட்டிநர் உரிமம்,
- வங்கி கணக்கு புத்தகம்,
- மருத்துவ காப்பீடு அட்டை,
- பான் கார்டு,
- பாஸ்போர்ட் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கான அடையாள அட்டை
- ஓய்வூதிய ஆவணம் வங்கி புத்தகம் (புகைப்படத்துடன்)
- தபால் அலுவலகம் அலுவலகத்தின் கணக்குப் புத்தகங்கள்
- தொழிலாளர் அமைச்சகத்தின் வழங்கிய காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
இருப்பினும் வாக்காளர் அட்டை இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாக்காளர்கள் இணையத்தில் தங்களது பெயர் இருப்பதை உறுதிசெய்திட வேண்டும் என்பது கட்டாயமானது.