தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன தெரியுமா? வாங்கி குவிக்கும் நாடு!
பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கிறது.
தங்கம் விலை
கடந்த 28 மாதங்களில் மத்திய வங்கிகள் மொத்தம் 28 முறை தங்கத்தை வாங்கியுள்ளன. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் அதிகளவில் தங்கம் வாங்கிய நாடாக கஜகஸ்தான் இருந்துள்ளது. அந்த நாடு வாங்கிய தங்கத்தின் அடிப்படையில், தற்போது அந்நாட்டின் மொத்த தங்க இருப்பு 308 டன்களை எட்டியுள்ளது. மேலும், பல்கேரியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளும் தங்கம் வாங்கிய முக்கிய நாடுகளாக உள்ளன.
வாங்கி குவிக்கும் நாடு
சீனாவின் மத்திய வங்கி கடந்த 10 மாதமாக தொடர்ந்து தங்கத்தை குவித்து வருகிறது. தற்போதைய கணக்கீடுகளின்படி, சீனாவின் மொத்த தங்க இருப்பு 2,300 டன்களை கடந்துள்ளது. அதிகளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அந்த நாட்டின் மத்திய வங்கியிடம் 8,133 டன் தங்கம் இருக்கிறது, மேலும் கடந்த 35 ஆண்டுகளாக அந்த அளவு குறைக்கப்படாமல் நிலைத்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஜெர்மனி (3,350 டன்), மூன்றாவது இடத்தில் இத்தாலி, அடுத்து பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை உள்ளன .
இந்நாடுகளின் தங்க இருப்பும் 2,400 டன்களை தாண்டியுள்ளது. சீனா, 2,301 டன்களுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து 1,040 டன் தங்கத்துடன் 7வது இடத்தில், ஜப்பான் 846 டன் தங்கத்துடன் 8வது இடத்தில், இந்தியா 840 டன் தங்கத்துடன் 9வது இடத்தில் உள்ளது