ஓலா ஷோரூம் முன் ஸ்கூட்டரை தீ வைத்த இளைஞர் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ!

Gujarat Viral Video
By Sumathi Oct 11, 2025 05:54 PM GMT
Report

வாடிக்கையாளர், ஷோரூம் முன் தனது ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

குஜராத், பாலன்பூரைச் சேர்ந்தவர் சாஹில் குமார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினார். சமீபத்தில், அவர் தனது மனைவி மற்றும் 5 வயது மகனுடன் ஷாப்பிங் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,

gujarat

​​ஸ்கூட்டரின் ஸ்டீயரிங் மற்றும் டயர் இணைப்பு கம்பி உடைந்தது. அந்த சமயத்தில், சாஹில் ஸ்கூட்டரில் மெதுவாகச் சென்றதால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இனி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே இதை மாற்றலாம் - ரொம்ப ஈஸி!

இனி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே இதை மாற்றலாம் - ரொம்ப ஈஸி!

வைரல் வீடியோ

இந்த சம்பவத்தை அடுத்து, ஸ்கூட்டரின் கோளாறை சரிசெய்யுமாறு ஷோரூமுக்கு அவர் சென்றார். ஓலா ஷோரூம் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் திருப்திகரமான பதிலோ அல்லது தீர்வோ கிடைக்கவில்லை.

இதனால் அவர், ஷோரூம் முன் ஸ்கூட்டரின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தார். தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.