உலகில் அதிக அறிவாளிகள் உள்ள நாடு; அமெரிக்கா, சீனா இல்லை - யார் தெரியுமா?
அதிக அறிவாளிகள் உள்ள நாடு குறித்த ஆய்வில் ஆசிய நாடு ஒன்று முதலிடம் பிடித்துள்ளது.
அதிக அறிவாளிகள் நாடு
உலகில் அறிவானவர்கள் என்றால் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தான் இருப்பார்கள் என்ற மனப்பான்மை மக்களிடத்தில் உண்டு.
ஆனால் ஆய்வு முடிவில் ஆசியாவில் உள்ள நாடு ஒன்று தான் உலகில் அதிக அறிவாளிகளை கொண்டுள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.இதில் முதல் 10 இடங்களில் கூட சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இடம்பெறவில்லை.
ஜப்பான்
பின்லாந்தை சேர்ந்த Wiqtcom Inc என்ற நிறுவனம் உலகளவில் மக்களின் IQ(Intelligence quotient) திறனை சோதித்து அதனடிப்படையில் தரவரிசை பட்டியலை உருவாக்கியுள்ளது. IQ என்பது மனிதர்களின் சிந்திக்கும், பகுத்தறியும் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனைப் பிரதிபலிக்கும் ஒரு எண் மதிப்பு ஆகும். அதிக IQ உடையவர் புத்திசாலியாக கருதப்படுவார்.
இதில் 112.30 பாயிண்ட் பெற்று ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது. சிக்கலை தீர்க்கும் திறன், ஒழுக்கம், மாறுபட்ட சிந்தனை ஆகியவற்றிற்கு ஜப்பானின் கல்விமுறை முக்கியத்துவம் அளிக்கிறது. ரோபாட்டிக்ஸ் முதல் செயற்கை நுண்ணறிவு வரை அதன் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளுக்கு ஜப்பான் பெயர் பெற்றது. ஜப்பானின் தொழில்நுட்பம் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பல வளர்ந்த நாடுகளை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜப்பானை தொடர்ந்து ஹங்கேரி 2வது இடத்தையும், தைவான் 3 வது இடத்தையும், இத்தாலி 4 வது இடத்தையும், தென் கொரியா 5 வது இடத்தையும் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து செர்பியா, ஈரான் பின்லாந்து, ஹாங்காங், வியட்நாம் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.