குறைந்த செலவில் MBBS படிக்கலாம் - எந்த நாடுகளில் தெரியுமா?

China Philippines Germany Russia
By Sumathi Sep 24, 2024 11:00 AM GMT
Report

குறைந்த செலவில் எம்.பி.பி.எஸ் படிக்கக்கூடிய சில நாடுகள் உள்ளன.

 எம்.பி.பி.எஸ்

 இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க பெரும்பாலான மாணவர்கள் ஜெர்மனி செல்கின்றனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண் அடிப்படையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேரலாம். ஆண்டுக்கு ரூ.4 முதல் 6 லட்சம் வரை மருத்துவம் படிக்க செலவாகிறது. ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம்(Heidelberg University) மற்றும் ஹாம்பர்க்(Hamburg University) பல்கலைக்கழகம் மருத்துவப் படிப்புக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.

குறைந்த செலவில் MBBS படிக்கலாம் - எந்த நாடுகளில் தெரியுமா? | Which Countries Mbbs Education Cheaper Details

இதற்கு அடுத்த படியாக ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க ரஷ்யா செல்கின்றனர். இங்கும் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண் அவசியம். குர்ஸ்க் மாநில மருத்துவ பல்கலைக்கழகம்(Kursk State Medical University) மற்றும் பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகம்(Bashkir State Medical University) விருப்ப தேர்வாக உள்ளது. இங்கு ரூ.29 முதல் ரூ.30 லட்சம் வரை செலவாகிறது.

 பிலிப்பைன்ஸில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பதாரர் வயது குறைந்தபட்சம் 17 மற்றும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் இருக்க வேண்டும். இங்கு எம்.பி.பி.எஸ் படிக்க ரூ.20 முதல் ரூ.22 லட்சம் வரை செலவாகும். 5.5 முதல் 6.5 ஆண்டுகளில் மருத்துவ படிப்பு முடிக்கப்படுகிறது.

குறைந்த செலவில் MBBS படிக்கலாம் - எந்த நாடுகளில் தெரியுமா? | Which Countries Mbbs Education Cheaper Details

பெலாரஸில் MBBS பட்டம் WHO மற்றும் NMCஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு ரூ.25 முதல் 30 லட்சம் வரை செலவாகும்.

 கஜகஸ்தானில் எம்பிபிஎஸ் படிக்க 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இங்கு மருத்துவப் படிப்புக்கு ரூ.25 லட்சம் வரை செலவாகும்.

ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு : மத்தியமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்

ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு : மத்தியமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்

சீனாவில் எம்பிபிஎஸ் 5 ஆண்டு படிப்பு மற்றும் ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப். வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்பதற்கு ரூ.29 முதல் ரூ.30 லட்சம் வரை செலவாகிறது.

 வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு சொந்த நாட்டுக்கு திரும்பும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் செய்ய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி (FMGE) தேர்வை எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.