63 வயதில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மூதாட்டி - கை தட்டி வரவேற்ற சக மாணவர்கள்

NEET Puducherry
By Thahir May 06, 2023 06:09 AM GMT
Report

63 வயதில் இளம் தலைமுறையுடன் அமர்ந்து வகுப்பறையில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மூதாட்டி குறித்த செய்தி வைரலாகி வருகிறது.

மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மூதாட்டி 

மத்தியப்பிரதேசம் மாநிலம் அம்லா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் (66) இவரது மனைவி சுஜாதா ஜடா இவருக்கு வயது 63. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் மத்திய பிரதேசத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

சுஜாதா ஜடா ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற சுஜாதா ஜடா தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய அவர், மருத்தும் படிக்க ஆசைப்பட்டுள்ளார். 

இதையடுத்து அவர் நீட் தேர்வு எழுத்த கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார். பின்னர் அவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள விநாயாகா மிஷின் மருத்துவக் கல்லுாரியில் சுஜாதா ஜடாவிற்கு இடம் கிடைத்தது. 

கை தட்டி வரவேற்பு கொடுத்த மாணவர்கள் 

இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சுஜாதா ஜடா கல்லுாரிக்குள் நுழைந்தார். முதல் நாள் வகுப்பறைக்குள் சென்ற அவரை பார்த்த மற்ற மாணவிகள் பேராசிரியர் என நினைத்து அவரை கைதட்டி வரவேற்பு அளித்துள்ளனர்.

63 years old lady studying MBBS

இதனால் புன்னகையுடன் நுழைந்த சுஜாதா ஜடாவோ நான் பேராசிரியர் இல்லை நானும் உங்களை போன்ற ஒரு மாணவியாக வந்துள்ளேன் எனக் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

இதை நம்பாத மற்ற மாணவர்கள் நமபாத நிலையில், தனது அடையாள அட்டையை காண்பித்து உள்ளார். அதன் பின்னரே அனைவரும் நம்பியுள்ளனர்.

 சுஜாதா ஜடாவுக்கு வகுப்பு எடுக்கும் மருத்துவ பேராசிரியருக்கோ 48 வயது என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

தன்னம்பிக்கை இருந்தால் போதும் 

இது குறித்து சுஜாதா ஜடா பேசுகையில், ராணுவத்திலும், அதன் பிறகு வங்கியிலும் வேலை பார்த்த போதிலும் எனது கவனம் மக்கள் சேவை என்பதே என்றிருக்கும்.

கல்வி கற்க எப்போதும் யாருக்கும் வயது தடையாக இருந்தது இல்லை. தன்னம்பிக்கை இருந்தால் போதும் தற்போது எனக்கு வயது 63 என்றாலும் அதை நான் எப்போதும் உணர்ந்தது இல்லை.

என் நோக்கமெல்லாம் மருத்துவமனையே இல்லாத எனது கிராமத்தில் சிறு மருத்துவமனை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள் அதற்காக தான் முறைப்படி டாக்டருக்கு படித்து சேவை செய்ய உள்ளேன் என்றார்.

இந்த வயதிலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கும் அவரது முயற்சிக்கும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர் மக்கள்.