தென்னிந்தியாவில் அதிக குற்றங்கள் நடக்கும் நகரம் எது தெரியுமா? வெளியான பகீர் தகவல்!

Bengaluru Crime Serbia
By Swetha Apr 06, 2024 07:33 AM GMT
Report

தென்னிந்தியாவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக பெங்களூரு முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக குற்றங்கள்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் இதனை தடுக்க எந்த நடவடிக்கை எடுத்தாலும் குற்ற வழக்குகள் குறையவே இல்லை.

தென்னிந்தியாவில் அதிக குற்றங்கள் நடக்கும் நகரம் எது தெரியுமா? வெளியான பகீர் தகவல்! | Which City In South India Is First In Crime List

இந்நிலையில், தென்னிந்தியாவிலேயே அதிக குற்ற வழக்குகள் நடைபெறும் நகரங்களில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளதாக செர்பிய நாட்டை சேர்ந்த அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டது.

செர்பியாவை தலைமையாக கொண்ட ஆன்லைன் டேட்டா பேஸ் நிறுவனமான நம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்ற வழக்குகளில் தென்னிந்தியாவில் பெங்களூரு நகரம் நம்பர் 1 ஆக திகழ்கிறது. அது மட்டுமின்றி, உலகின் 200 நகரங்களில் பெங்களூரு 102வது இடத்தில் உள்ளது.

தகாத உறவில் தாய்; கொலை செய்த தந்தை - தப்பிக்க வைக்க மகன் செய்த செயல்!

தகாத உறவில் தாய்; கொலை செய்த தந்தை - தப்பிக்க வைக்க மகன் செய்த செயல்!

பகீர் தகவல்

உலகின் மிக அதிகமான குற்றங்கள் வெனிசுலாவில் உள்ள கார்காசோன் நகரத்தில் நடப்பதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளது.அதற்கு அடுத்த இடத்தில் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரம் உள்ளது. தற்போது பெங்களூரு தென்னிந்தியாவின் நம்பர் 1 நகரமாக உள்ளது.

தென்னிந்தியாவில் அதிக குற்றங்கள் நடக்கும் நகரம் எது தெரியுமா? வெளியான பகீர் தகவல்! | Which City In South India Is First In Crime List

சுமார் 200 நகரங்களின் குற்றவழக்குகளைப் பகுப்பாய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு மட்டுமின்றி இந்தியாவின் பல நகரங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் டெல்லி 70வது இடத்திலும், நொய்டா 87வது இடத்திலும் உள்ளன.

குருகிராம் 95 இடத்திலும், பெங்களூரு 102 இடத்திலும், இந்தூர் 136 இடத்திலும், கொல்கத்தா 159 இடத்திலும், மும்பை 169 இடத்திலும் உள்ளன. தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் 174 இடத்திலும், சண்டிகர் 177 இடத்திலும், புணே 184 இடத்திலும் உள்ளது, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.