சிறையில் வாடும் செந்தில் பாலாஜி - எங்கு தான் இருக்கிறார் தலைமறைவான அசோக் குமார்??
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் சிறையில் தான் உள்ளார்.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் தமிழகத்தின் மின்வாரிய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த கைதை தொடர்ந்து அவர், மருத்துவமனையில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டும், தற்போது வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பல முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
கடந்த 30-ஆம் தேதியுடன் அவரின் நீதிமன்ற காவல் ,முடிவடைந்த நிலையில், மீண்டும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 36-வது முறையாக நீடித்துள்ளது நீதிமன்றம். நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு எப்போது ஜாமீன் வழங்கப்படும் என்பது இன்னும் தெரியவில்லை.
அசோக் குமார் எங்கே?
பலரும் செந்தில் பாலாஜி வெளியே வருவாரா? என்றெல்லாம் பேசி வரும் சூழலில், கடந்த 10 மாதங்களுக்கு மேலாக எங்கே உள்ளார் என்பது தெரியாமல் இருக்கின்றார் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார்.
அமலாக்கத்துறை தங்களின் விசாரணை வட்டத்திற்குள் அசோக் குமாரை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், அவர் தலைமறைவாக இருக்கின்றார்.
கரூர் பைபாஸ் ரோட்டில் கட்டி வரும் வீட்டிலும் ED, IT ரைட்கள் நடந்தன.
அசோக் குமார் மீதும் குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் வரை செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்க உத்தரவிடாது போலும்.