சித்தார்த் - அதிதி ராவ்வின் திருமணம் எங்கு நடக்கிறது தெரியுமா? அவர்களே சொன்ன தகவல்!
சித்தார்த் - அதிதி ராவ்வின் திருமணம் எங்கு நடக்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சித்தார்த் - அதிதி
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.நடிகை அதிதியுடன் இணைத்து காதல் கிசுகிசுவில் அவ்வப்போது சிக்கிக்கொள்வார்.
இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், இன்ஸ்டாகிராமில் இணைந்து பல ரீல்ஸ்களைச் செய்திருந்தனர். அண்மையில, இருவருக்கும் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத ஸ்வாமி கோவிலில் அதிதியின் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
எங்கு நடக்கிறது?
இது தொடர்பாக சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது” என பதிவிட்டார். இருவரது திருமணமும் எப்போது நடக்கும் என்பது குறித்து தொடர்ந்து ரசிகர்களும் செய்தியாளர்களும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்து, திருமணம் தொடர்பான தகவலைக் கூறியுள்ளனர். அதிதி ராவ் ஹைதாரியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அந்தக் காலத்தில் ஹைதராபாத் மாநிலத்தின் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.
அதாவது வனர்பதி ராஜ வம்சத்தைச் சேர்ந்த குடும்பம். இதனால் இவர்களது திருமணம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, வனர்பதி கோவிலில் நடக்கும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை திருமணம் எப்போது நடக்கும் என்ற தேதியை குறிப்பிடவில்லை.