ரகசியமாக 2வது திருமணம் செய்துக் கொண்ட சித்தார்த் - தீயாய் பரவும் தகவல்!
சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்தார்த் - அதிதி
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சித்தா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.
திருமணம்
தொடர்ந்து, நடிகை அதிதியுடன் இணைத்து காதல் கிசுகிசுவில் அவ்வப்போது சிக்கிக்கொள்வார். இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், இன்ஸ்டாகிராமில் இணைந்து பல ரீல்ஸ்களைச் செய்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த்துக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.