மேகங்கள் தழுவும் பேரழகு; உலகத்தின் சொர்க வாசல் பற்றி தெரியுமா? இங்கு போவது கடினமாம்!
உலகில் சொர்க்கத்தின் வாசல் என்று சொல்லப்படும் இடம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகின் சொர்க வாசல்
பொதுவாக ஒருவரின் இறப்பிற்கு பின் அவர் நன்மை செய்திருந்ததால் உடலில் இருந்து ஆத்துமா பிரிந்து சொர்க்கத்தை சென்றடையும் என்று சொல்லப்படுகிறது. அதாவது மேல் உலகம் என்று புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. நமக்கு மகிழ்ச்சியளிக்கும் தருணத்தை கூட சொர்க்கத்தில் இருந்ததுபோல் இருந்தது என குறிப்பிடுவது வழக்கம் தான்.
ஏனென்றால் அது அந்தளவிற்கு மகிழ்ச்சியளிக்கும் இடமாக நம்பப்படுகிறது. அப்படியாக உலகில் உள்ள ஒரு இடத்தை மக்கள் சொர்க்கத்தின் வாசல் என்று அழைக்கின்றனர். அந்த இடம் சீனாவின் ஹுனான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஜாங்ஜியாஜியில் உள்ளது.
இப்பகுதியில் தியான்மென் மலை தேசிய பூங்காவில் இருக்கும் தியான்மென் மலையில் இயற்கையாகவே தோன்றிய ஆர்ச் (Natural arch) வடிவை சொர்க்கத்தின் வாசல் என்று குறிப்பிடுகின்றனர்.
ரஷ்யாவில் நிலப்பரப்பில் உள்ள எல்லாவற்றையும் தனுக்குள் இழுத்துக் கொள்ளும் நரகப் பள்ளம் - திகிலூட்டும் தகவல்
இங்கு போவது கடினமாம்
கடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரத்தில் இருக்கும் இது, குகை வடிவில் இருக்கிறது. இயற்கையின் அழகை வர்ணிக்க அழகே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேகங்கள் தழுவ குகை வாலின் இருபுறமும் மரங்கள் சூழ பிரம்மிக்க வைக்கிறது.
இங்குள்ள ஆர்ச் வழியாக எட்டி பார்த்தால் அங்கிருந்து உலகைப் பார்க்கும் தருணம் உடலை சிலிர்க்க வைக்கும் நிகழ்வாக இருக்கும். இதை பற்றி கேள்விபட்டால் அங்கு சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், இப்பகுதியை அவ்வளவு எளிதில் அடைய முடியாது. 2005 ஆம் ஆண்டிற்கு பின் இந்த மலைப் பகுதியில் கேபில் கார் அமைக்கப்பட்டுள்ளது.
மலைக்கு செல்ல சாலைகளும், கிளாஸ் ஸ்கைவாக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 4000 அடி வரை கேபில் கார் மூலம் சென்றடைய முடியும். சொர்க்கத்தில் வாசல் நுழைவாயிலுக்கு சென்றடைய 999 படிக்கட்டுகளை கடந்துதான் செல்லமுடியும். இது சொர்க்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் என்று குறிப்பிடப்படுகிறது.
சீனாவின் கூற்றுப்படி, 9 என்பது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் விதமாக உள்ளது. அதனால் 999 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மலைகளுக்கு நடுவே இத்தனை படிக்கட்டுகளை தாண்டி சொர்க்கத்தின் வாசலைப் பார்க்க மக்கள் திரளாக திரண்டு ஒவ்வொரு வருடமும் வருகை தருகின்றனர்.