ரஷ்யாவில் நிலப்பரப்பில் உள்ள எல்லாவற்றையும் தனுக்குள் இழுத்துக் கொள்ளும் நரகப் பள்ளம் - திகிலூட்டும் தகவல்
ரஷ்யாவின் சைபீரிய கிராமத்தில் திடீரென ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளம் நிலப்பரப்பில் உள்ள எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துக் கொள்வதாக கிராம மக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பள்ளத்தை பாதாளத்துக்கான வாசல் என்றும், நரகத்தின் வாசல் என்று இதை கூறுகிறார்கள். இதில் ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், இப்பள்ளம் பெரிதாகி வளர்ந்துக் கொண்டே செல்கிறதாம்.
தற்போது சமூகவலைத்தளங்களில் நிலத்தின் பெரும் பகுதியை அது உள்வாங்கிக் கொண்டு இருக்கும் படங்கள் வைரலாகி வருகிறது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், உறைபனி நிலங்கள் உருகத் தொடங்கியதன் விளைவாக இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டதாகவும், உலக வெப்பமயமாதல் காரணமாக இது போன்ற பள்ளங்கள் தோன்றுவதாக தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இன்று நிகழ்ந்த துயரம் : கிரீஸ் மரத்திலிருந்து வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு IBC Tamil
