எய்ம்ஸ்; 5 ஆண்டுகளாக என்னதான் செய்தீர்கள்..எப்போது கட்டி முடிப்பீர்கள்? நீதிமன்றம் கேள்வி!
மதுரை எய்ம்ஸை எப்போது கட்டி முடிப்பீர்கள் என்று நீதுமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
என்ன செய்தீர்கள்?
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்.
மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..?" என்று உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
நீதிமன்றம் கேள்வி
அதற்கு, கொரோனா பொதுமுடக்கத்தை காரணம் காட்டிய மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தது.
கொரோனா கடந்த 2022-ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. அதனைக் காரணம் காட்டாதீர்கள் என்று கண்டித்த நீதிமன்றம் மதுரை கிளை, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கி,
எப்போது நிறைவடையும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான விரிவான அறிக்கை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.