மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது ? - மு.க.ஸ்டாலின்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ? என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேல்வியெழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மோடி அவர்களே 2015-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 2019-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அடிக்கல் நாட்டிவிட்டு சென்றீர்கள். இன்று இரவு மதுரைக்கு வர உள்ள நீங்கள் , இன்றோ அல்லது நாளையோ யாருக்கும் தெரியாமல் சென்று, மதுரையில் எய்ம்ஸ் என்ன ஆனது என்று பார்ப்பீர்களா?
செங்கல் வைத்துவிட்டு சென்றோம் அது எங்கே என கேளுங்கள். செங்கலை உதயநிதி எடுத்துவிட்டு போய்விட்டார் எனக் கூறுவார்கள்.
எனவே தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.