அந்த தேர்தலில் தான் - விஜய்க்கு விஜயம்..? கரெக்ட்டாக கணித்த பிரபல ஜோதிடர்..!

Vijay Tamil nadu Election Thamizhaga Vetri Kazhagam
By Karthick Feb 05, 2024 11:00 PM GMT
Report

விஜய் அரசியல் வருகை குறித்து தொடர்ந்து பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

விஜய் அரசியல்

நடிப்பில் உச்சம் தொட்டிருக்கும் நேரத்திலேயே தனது அரசியல் வருகையை மிகவும் எளிமையாக அறிவித்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் விஜய். 2 நாட்களாக விஜயின் அரசியல் வருகை குறித்து தான் பலரும் பேசி வருகின்றனர்.

when will vijay enjoy in politics

நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் சூடுபிடித்து வரும் நிலையிலிலும் விஜய்யின் அரசியல் வருகை தான் தமிழ்நாட்டில் ஹாட் டாபிக். இந்நிலையில், பிரபல ஜோதிடர் ஒருவர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், எப்போது பெரிய வெற்றியை பதிவு செய்வார் என்பதை கணித்துள்ளார்.

கட்சி ஆரம்பிச்சு 2 நாள் தான் ஆச்சு..! போலீசாரின் விசாரணையில் விஜய்யின் த.வெ.கழகத்தினர்...?

கட்சி ஆரம்பிச்சு 2 நாள் தான் ஆச்சு..! போலீசாரின் விசாரணையில் விஜய்யின் த.வெ.கழகத்தினர்...?

அதாவது, கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் விஜய் பிறந்தார் என்றும் தற்போது அவரின் ராசியில் சந்திரனுடன், செவ்வாய் அமர்ந்திருக்கிறார். தற்போது செவ்வாய் நீச்சம் பெற்றாலும், ஆட்சி சந்திரனுடன் அமர்ந்திருப்பதால், நீச்ச பங்க ராஜயோக விஜய்க்கு உள்ளது.

when will vijay enjoy in politics

அதன் காரணமாக தான், தைப்பூசம் நாளில் கட்சி பெயரை விஜய் பதிவு செய்ய கொடுத்துள்ளார் என்றும் நீச்ச பங்க ராஜ யோக அமைப்பை பெற்றவர்களுக்கு திடீர் அரசாளும் யோகம் தேடி வரும் என்று சுட்டிக்காட்டினார்.

when will vijay enjoy in politics

மேலும், அஷ்டமத்து சனி காலத்தில் கட்சி பெயரை அறிவித்தாலும், விஜய் முழுமையான அரசியல்வாதியாக மாற இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் சூழலில், அதனை வைத்து தான் 2026 சட்டசபைத் தேர்தலை விஜய் குறிவைக்கிறார்.

when will vijay enjoy in politics

2026-ஆம் ஆண்டில் விஜய்க்கு 52வது வயதில் கடக ராசியில் ஜென்ம குருவாக குருவே பயணிக்கிறார். அதே போல, 2031-ஆம் ஆண்டில் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்றும அவர் கணித்துள்ளார்.