எப்போது பொங்கல் பரிசு - ரூ.1000 அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Thai Pongal Puducherry
By Karthick Jan 01, 2024 01:17 AM GMT
Report

வரும் பொங்கல் தினத்தன்று பரிசு தொகையாக ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பதை குறித்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசாக அரசின் சார்பில் ரேஷன் அட்டைக்காரர்களுக்கு ரூ.1000 அல்லது துணிகளுடன் பொங்கல் பரிசு தொகை போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.

when-will-pongal-parisu-will-be-given-1000-rs

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்திலும் இந்த பரிசு தொகுப்பு அரசால் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு, பொங்கல் வர இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில், தற்போது இது குறித்து முக்கிய செய்தி ஒன்றை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இன்னைக்கு ஊருக்கு போறீங்களா..?கோயம்பேடு வராதீங்க...முக்கிய அறிவிப்பு பலகை..!

இன்னைக்கு ஊருக்கு போறீங்களா..?கோயம்பேடு வராதீங்க...முக்கிய அறிவிப்பு பலகை..!

இது குறித்து புதுச்சேரி வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ்,புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை/பழங்குடியினர் இனமக்கள்,

எப்போது

மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1,30,791 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 மற்றும்இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விதம் நேரடி பணப் பரிமாற்றத்தின் (DBT) மூலம் 04.01.2024 அன்று பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

when-will-pongal-parisu-will-be-given-1000-rs

இதன் மூலம் ரூ.12.29 கோடி அரசாங்கம் செலவிடுகிறது.மேலும் புதுச்சேரி பிராந்தியத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான பயனாளர்கள் அனைவரது வங்கி சேமிப்பு கணக்கில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதத்திற்கான உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.