ஏப்.16 முதல் 7 கட்டமாக நடக்கும் தேர்தல் - இன்று வெளியாகும் தேர்தல் தேதி..?
மக்களவை தேர்தல் தேதியை இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
மக்களவை தேர்தல்
நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நெருங்கி வருகின்றது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பரப்புரை என இப்போதே நாட்டிலுள்ள கட்சிகள் தீவிரமாக வேலை செய்யத்துவங்கிவிட்டன. மக்களவை தேர்தலுடன் மாநில தேர்தலும், சில இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
எப்போது..?
அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
வரும் ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே மாத இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.