காலை உணவை சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
காலை உணவை சாப்பிட உகந்த நேரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காலை உண
இன்றைய காலகட்டத்தில் உணவு முறையிலும் அதனை உன்னும் முறையிலும் பல விஷயங்கள் மாறிவிட்டது. மூன்று வேளையும் நாம் சரியான நேரத்தில் சத்தான உணவை சாப்பிடுகிறோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக காலை உணவை பெரும்பாலனோர் தவிர்க்கும் பழக்கம் உள்ளது.
ஆனால் காலை உணவு என்பது ஒரு நாளின் முக்கியமான உணவாகும். இது அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. காலை உணவு என்பது அன்றைய முக்கிய மற்றும் முதல் உணவு என்பதால் சத்தானதாகவும்,
ஆரோக்கியத்தை பராமரிக்க அதை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதும் அவசியம். காலை உணவு ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. மற்றும் ஆற்றல் செயலிழப்பு போன்றவற்றை தடுக்கிறது. எனினும் காலையில் சர்க்கரை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
எப்போது?
காலையில் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க கூடாது. இது அடிக்கடி நாள்பட்ட உடல்நல நோய்களை ஏற்படுத்தும். இது எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கிறது. எப்போது சாப்பிட வேண்டும்? என்றால் காலையில் தூங்கி எழுந்த உடனே ஒரு மணி நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
இதனால் நீண்ட காலத்திற்கு பசி இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. உணவை காலை 6 முதல் 10 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. ஏனென்றால், இது மன அழுத்தம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
எனவே சிறந்த ஆரோக்கியத்தை காக்க காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் தனிப்பட்ட பரிந்துரைகளுக்கு மருத்துவரை அனுகுவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.
எனவே உணவை சத்தானதாகவும் சரியான நேரத்திலும் உட்கொள்வது அவசியம். அதேபோல முதல் உணவில் அதிகம் புரத சத்து நிறைந்தவையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.