அன்றாட பழக்கங்களில் உள்ள ஆபத்து.. மூளை திறனை பாதிக்குமாம் - கொஞ்சம் கவனமா இருங்க!
மூளை திறனை பாதிக்கும் சில பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பழக்கம்
மூளை என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான உறுப்பாகும். நமது பல விதமான செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் ஒரு சிக்கலான உறுப்பு தான் மூளை. இது இன்றி எதுவுமே இயங்காது.
அப்படிப்பட்ட மிக முக்கியமான இந்த உறுப்பை அன்றாட செய்யும் சில பழக்கங்களால் பாதிப்படைகிறது என்றால் நம்ப முடியுமா? ஆம், தினந்தோறும் நாம் செய்யும் சில செய மூளையின் திறனை கடுமையாக பாதிக்கிறது.
காலை உணவு தவிர்ப்பது
காலை உணவை தவிர்ப்பதால் மூளைக்கு கிடைக்க வேண்டிய ஊட்டசத்துகள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால், விழிப்புணர்வு மற்றும் கவனம் செலுத்தும் திறன் குறையுமாம். உணவு சாப்பிடாமல் நீண்ட நேரம் இருப்பது மூளை செயல்திறனை பாதிக்கும்.
மல்டிடாஸ்கிங்
தொடர்ந்து அதிகமான மல்டிடாஸ்கிங் செய்வது மூளைக்கு அதிக வேலையை தருகிறது. இதனால் அதன் செயல் திறன் குறையலாம்.
இதன் காரணமாக பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதோடு செய்யும் விஷயங்களை நியாபகம் வைத்துக்கொள்வதில் பெரும் சிக்கலை சந்திக்கநேரிடலாம்.
ஹெட்போன் பயன்பாடு
ஹெட்போன் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் அதனை அதிக நேரம் பயன்ப்படுத்துவதும். அதிக சத்தத்தில் ஹெட்போனில் பாட்டு கேட்பதும் செவித்திறனை பாதிக்கிறது. அதுமட்டுமின்றி, மூளை ஆரோக்கியத்தில்
எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கச் செய்யலாம். மூளைக்கு அதிக அழுத்தத்தை அளித்து சோர்வு மற்றும் நினைவாற்றலை பாதிக்க செய்யலாம்.
போதுமான நேரம் தூங்கதது
தூக்கமின்மை மூளையின் நினைவாற்றல் கற்றல் செயல்முறை பாதிக்க செய்யலாம்.
அவர்கள் முடிவு எடுப்பதில் கூட சில சிரமத்தை சந்திக்க நேரிடலாம். காலப்போக்கில் அது ஞாபக மறதி போன்ற நோய் அபாயத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
அதிக திரை நேரம்
அதிகப்படியான திரை நேரம் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யலாம். கணினி, மொபைல் போன்றவற்றில் இருந்து வெளியேறும்
நீல நிற வெளிச்சம் கண்கள் மற்றும் சருமத்தை பாதிப்பது மட்டுமின்றி மூளை ஆரோக்கியத்தையும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த செய்யலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சாப்பிடுவது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது,
அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி மூளை ஆரோக்கியத்தை பாதிக்க செய்யலாம். இவை அறிவாற்றல் திறனை குறைப்பதோடு நினைவாற்றல் செயல்திறனை குறைக்க செய்யலாம் .
உடல் செயல்பாடு இல்லாமை
குறைவான உடன் செயல்பாடு மூளைக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தை குறைக்ககூடும்.
இதன் காரணமாக மூளையின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன் பாதிக்கப்பட செய்யலாம். உடல் உழைப்பின்மை, மன அழுத்தம் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது.