இவ்வளவு நாள் வாழைப்பழத்தை தவறாக சாப்பிடுகிறோமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் குறித்து நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தவறாக சாப்பிடுகிறோமா?
வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடிய பழம் ஆகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பழம் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. அதிலும் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கலாம்.
ஒரே நாளில் 4 வாழைப்பழங்களை சிலர் சாப்பிடுவார்கள், ஒரு சிலர் காலை எழுந்ததும் வாழைப்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இருப்பினும் பல சுகாதார நிபுணர்கள் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
வயிற்று பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள்
அசிடிட்டி அல்லது வாயு தொந்தரவு இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. உண்மையில் வாழைப்பழங்கள் கார்போஹைட்ரேட்டின் வளமான மூலமாகும். எனவே இவை சில நேரங்களில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
ஏற்கனவே வயிற்றுப் பிரச்சனைகளால் அவதிப்படுவோர் காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
உடல் பருமனானவர்கள்
வாழைப்பழங்கள் உடல் பருமனை அதிகரிக்ககூடிய பழமாகும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் இந்த பழத்தை சாப்பிட்டால், உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கலோரிகள் சேரும். இது எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது.
உடல் எடை கூடும் என்று கவலைப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் இந்த பழத்தை சாப்பிடாமல் தவிர்க்கலாம். அதேபோல ஒரு நாளைக்கு ஒரு பழம் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.
வாழைப்பழத்தை எப்போது சாப்பிடலாம்?
வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மதியம் 12 மணியில் இருந்து மாலை 5 மணி வரையே சிறந்த நேரம். ஏனெனில் இந்த நேரத்தில் சோம்பலாக இருந்தால் வாழைப்பழம் உடனே ஆற்றலைத் தருவதோடு, வயிறையும் நீண்ட நேரம் நிரம்பியதுபோல உணரவைக்கும்.
அதேபோல், வாழைப்பழங்களை மாலை அல்லது இரவு என மிகவும் தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.