இந்தாண்டு மகா கந்த சஷ்டி விரதம் எப்போது? மறக்காமல் இதை பண்ணுங்க!

Festival Parigarangal Murugan
By Vidhya Senthil Oct 11, 2024 10:45 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in ஆன்மீகம்
Report

இந்தாண்டு மகா கந்த சஷ்டி விரதம் எப்போது? இதை பாருங்க! முருக பெருமானுக்கு உகந்த நாளான சஷ்டி கருதப்படுகிறது .

 மகா கந்த சஷ்டி விரதம் 

இவை மாதம் தோறும் இரண்டு வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி விரதம் மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும். மகா கந்த சஷ்டி விரதம் எப்போது துவங்குகிறது என்று இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

shashti vratham

இந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை கந்த சஷ்டி விரதம் துவங்கி நவம்பர் 7ஆம் தேதி சூரசம்காரமும் ,நவம்பர் எட்டாம் தேதி திரு கல்யாணமும் நடைபெற உள்ளது. 

இந்த 3 ராசிக்காரர்கள் மட்டும் தான் காலில் கருப்பு கயிறு கட்டணுமாம்...என்ன காரணம் தெரியுமா?

இந்த 3 ராசிக்காரர்கள் மட்டும் தான் காலில் கருப்பு கயிறு கட்டணுமாம்...என்ன காரணம் தெரியுமா?

யாரெல்லாம் விரதம் இருக்கலாம்?குழந்தை வரத்திற்காக ஏங்கும் தம்பதிகள் ,தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டும் என நினைப்பவர்கள், வறுமைப் பிடியில் சிக்கி தவிப்பவர்கள், நோய் குணமாக வேண்டுபவர்கள், எதிரிகள் தொல்லை அதிகம் இருப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

விரதம்  முறை

சஷ்டி விரதம் மேற்கொள்வதற்கு முதலில் உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதத்தை செய்ய வேண்டும் .ஒரு நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள் இருந்து கொள்ளலாம். ஒரு வேளை உணவு மற்றும் பால், பழம் எடுத்துக் கொள்ளலாம் . மேலும் 6 நாள் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் சூரசம்காரம் அன்று விரதம் இருக்கலாம்.

murugan

இது மிகவும் சிறப்பு வாய்தது. சஷ்டியில் விரதம் இருப்பதால் முருகப்பெருமானே பிள்ளையாக பிறப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் செழிப்பான வாழ்க்கையும் புகழையும் முருகப்பெருமான் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையின் காரணமாக கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.