கோவிலில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய கட்டுப்பாடு - என்னென்ன தெரியுமா?

Corona Lockdown Temple
By Irumporai Apr 13, 2021 11:04 AM GMT
Report

கோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளது.

அதன்படி, கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் திருமணங்களில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் தடை விதிக்கப்ப்பட்டுள்ளது.

கோயில்களில், பொது மக்கள் வழிபாடு இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படும். எனினும் கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோயில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோவிலில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய கட்டுப்பாடு - என்னென்ன தெரியுமா? | Temple Wedding New Restrictions Corona Lockdown

திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.கோயிலில் நடக்கும் திருமணங்களில் 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் அதற்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். 50 நபர்களுக்கு மட்டும் அனுமதித்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அந்த புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.