When character Is Lost Everything Is Lost - மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை
மாணவர்களுக்கு நடிகர் விஜய் பல அறிவுரைகளை வழங்கினார் அவர் நிகழ்ச்சியில் மேடையில் பேசுகையில்,
உங்களுடை ஒழுக்கம் மிக முக்கியம்
என் நெஞ்சில் குடியிருக்கும் சானை படைத்த நண்பர், நண்பிகளுக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
மனசுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வந்ததாக உணர்கிறேன். நான் உங்களை மாதிரி ஒரு ப்ரைட் மாணவன் இல்லை. நான் ஒரு ஜஸ்ட் பாஸ் ஆக கூடிய மாணவன் தான்.
என்ன பேசுறதுன்னு எனக்கு தெரியல...எனக்கு பிடிச்ச 2 விஷயங்களை உங்களிடம் சேர் செய்கிறேன்.
முழுமையான கல்வி என்று சொல்கிறோம். பள்ளி முதல் கல்லுாரி வரை சென்று பட்டம் பெறுவது வரை கிடைப்பது கிடையாது. உங்களுடைய கேரக்டருக்கும், சிந்திக்கும் திறனும் தான் படிப்பு முடித்த பின் கிடைக்க கூடியது.
When Charecter Is Lost Everything Is Lost - என்று மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கினார்.
மேலும் பேசிய அவர், சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் தவறான தகவல்கள்..முடிந்த வரை அனைத்து தலைவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்
அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தான் நாளை வாக்காளர்கள் பெரிய பெரிய தலைவர்களை தேர்ந்தெடுக் போறீங்க.
காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது இப்போ நிறையவே இருக்கு..ஒருவர் தேர்தலில் 15 கோடி செலவு பண்ணுகிறார் என்றால் அதற்கு முன் எவ்வளவு சம்பாதிக்கிறார்.
இனி நீங்கள் உங்க அம்மா அப்பாகிட்ட போயிட்டு இனி ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று சொல்லுங்கள்.
மேலும் தேர்தலில் வெற்றி பெறாத மாணவர்களை சந்தித்து பேசுங்கள் அவர்களுக்கு உதவிடுங்கள் என்று பேசிய அவர், உங்களால் இது முடியாது, அது முடியாது சொல்வதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாதீர்கள் என்று தெரிவித்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.