ஓட்டுக்கு பணம் வாங்க விடாதீர்கள் - மாணவர்களிடம் கோரிக்கை வைத்த நடிகர் விஜய்..!
ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட விடாதீர்கள் உங்கள் பெற்றோரிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று நடிகர் விஜய் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று சந்தித்தார்.
சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியிில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய்யின் காரின் பின்னால் ஏராளமான ரசிகர்கள் ஓடிய படி சென்றனர்.
இந்த நிலையில் விழா நடைபெறும் ஆர் கே கன்வர்ஷன் சென்டருக்கு காரில் வந்தார் நடிகர் விஜய். அப்போது அவரை பல கேராக்கள் ஆக்கிரமித்தனர். மேலும் அவரை ரசிகர்கள் சூழ்ந்ததால் அவர் அங்கிருந்து தப்பி மேடைக்கு செல்வதற்குள் பெரும் பாடு பட்டார். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
ஓட்டுக்கு பணம் வாங்க விடாதீர்கள்
பின்னர் மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் பேசுகையில், சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் தவறான தகவல்கள்..முடிந்த வரை அனைத்து தலைவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் தான் நாளை வாக்காளர்கள் பெரிய பெரிய தலைவர்களை தேர்ந்தெடுக் போறீங்க.
காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது இப்போ நிறையவே இருக்கு..ஒருவர் தேர்தலில் 15 கோடி செலவு பண்ணுகிறார் என்றால் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருப்பார். இனி நீங்கள் உங்க அம்மா அப்பாகிட்ட போயிட்டு இனி ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று சொல்லுங்கள்.
மேலும் தேர்தலில் வெற்றி பெறாத மாணவர்களை சந்தித்து பேசுங்கள் அவர்களுக்கு உதவிடுங்கள் என்று பேசிய அவர்,
உங்களால் இது முடியாது, அது முடியாது சொல்வதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்.