80,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் அதிசயம் - இந்த நாட்களில் காணலாம்

India World
By Karthikraja Oct 01, 2024 01:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வால் நட்சத்திரத்தை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வால் நட்சத்திரம்

விண்ணில் உள்ள தூசி, பாறைகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் உருவானதுதான் வால் நட்சத்திரம். 2023 ஜனவரி மாதத்தில் சீனாவின் வானியலாளர்கள் தொலைநோக்கியின் உதவியால் ஒரு வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். 

comet c/2023 a3

இந்த வால்நட்சத்திரத்திற்கு Comet C/2023 A3 (Tsuchinshan-ATLAS) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த வால் நட்சத்திரமானது அதன் சுற்றுப் பாதையை சுற்றி முடிக்க சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. 

மனிதனால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள் என்ன தெரியுமா? ஆனால் பூமியில் இல்லை

மனிதனால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள் என்ன தெரியுமா? ஆனால் பூமியில் இல்லை

எப்போது காணலாம்

80,000 க்கு முன்னர் பூமியில் வாழ்ந்த நம் மூதாதையர்கள் இந்த வால் நட்சத்திரத்தை பார்த்துள்ளனர். தற்போது நமக்கு இந்த வால்நட்சத்திரத்தை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் சென்றுள்ளது. 

comet c/2023 a3 in tamilnadu

இன்று பெங்களூரு பகுதிகளில் சூரிய உதயத்திற்கு முன்னர் காட்சியளித்த இந்த வால்நட்சத்திரத்தை பலரும் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.  

இந்த வால்நட்சத்திரம் மீண்டும் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 26 வரை பூமியை நெருங்கும்போது பார்க்கலாம். சூரிய உதயத்திற்கு பின்னர் மேற்கு வானில் இந்த வால்நட்சத்திரத்தை காணலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.