மக்களே.. ஜனவரி முதல் இந்த செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!
சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயலி செயல்ப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையம் மூலம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது,
கால் பேசுவது முதல் பணப்பரிமாற்றம் செய்வது வரை பயனர்களை கவர புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பழைய ஆன்ட்ராய்டு ஓஎஸ் உள்ள சில செல்போன்களில் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயல்படாது
அதாவது, கிட்கேட் ஓஎஸ் மற்றும் பழைய வெர்ஷன்கள் உள்ள செல்போன்களில் பாதுகாப்பு மற்றும் புதிய அப்டேட்களை சரியாக செயல்படுத்த இயலாது என்பதால் வாட்ஸ்அப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக சாம்சங் செல்போன் மாடல்களான Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini மற்றும் மோடரோலா Moto G 1st Gen ஆகிய மாடல்களில் இனி வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஹச்டிசி, எல்.ஜி., சோனி செல்போன்களில் உள்ள சில மாடல்களிலும் வாட்ஸ்அப் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.