தமிழ்நாடு அரசின் whatsapp சேனல் அறிமுகம் - இனி மக்கள் ஈஸியா திட்டங்களை அறிந்திடலாம்!

Tamil nadu Governor of Tamil Nadu WhatsApp
By Swetha Jun 11, 2024 03:21 AM GMT
Report

தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

whatsapp சேனல்

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. "TNDIPR, Govt of Tamilnadu" என்ற பெயரில் வாட்ஸ்ப் அப் சேனல் அறிமுகமாகியுள்ளது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,

தமிழ்நாடு அரசின் whatsapp சேனல் அறிமுகம் - இனி மக்கள் ஈஸியா திட்டங்களை அறிந்திடலாம்! | Tamilnadu Govt Starts Channel In Whatsapp

எக்ஸ் தளம் மற்றும் யூ டியூப் பக்கங்களை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் சேனலும் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. அதில் பொது மக்கள் கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து அரசின் திட்டங்களின் முழு விவரங்களையும் வாட்ஸ் அப் சேனல் மூலம் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.

அதற்கு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் - வாட்ஸ்அப் உறுதி

அதற்கு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் - வாட்ஸ்அப் உறுதி

தமிழ்நாடு அரசு

பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு பயனடையத் துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில், Facebook, Instagram, Twitter, Youtube போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் whatsapp சேனல் அறிமுகம் - இனி மக்கள் ஈஸியா திட்டங்களை அறிந்திடலாம்! | Tamilnadu Govt Starts Channel In Whatsapp

மேலும் இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (Whatsapp) சேனல் "TNDIPR, Govt of Tamil Nadu" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள

கீழ்க்கண்ட துலங்கல் குறியீடு (QR Code) ஸ்கேன் செய்யவும்.மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் மேற்கண்ட சமூக வலைதள கொடுக்கப்பட்டுள்ள துலங்கல் தெரிவிக்கப்படுகிறது. பக்கங்களை சிறிய அளவில் குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.