இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம்- போட்டோ, வீடியோவும் அனுப்பலாம்..

WhatsApp Meta
By Sumathi Apr 25, 2024 03:57 AM GMT
Report

இண்டர்நெட் இல்லாமல் ஆவணங்களை மற்றவர்களுடன் பகிரும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது.

வாட்ஸ்அப்

இண்டர்நெட் உதவி இல்லாமல் எந்தவொரு சமூக வலைதளங்களையும் உபயோகப்படுத்த முடியாத சூழல் தான் உள்ளது.

whatsapp update

இணையவசதி இல்லாமல் புளூடூத் உதவியுடன் Share it மற்றும் Near By Share போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்பமுடியும் என்ற நிலையே நீடித்து வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியும் இந்த சேவைகளை வழங்கவுள்ளது. அதன்படி, இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp System Files, Photo Gallery அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும்.

Whatsapp: இனி இது இலவசம் கிடையாது; பணம் கட்டனும், பரபர தகவல் - பயனாளர்கள் கலக்கம்!

Whatsapp: இனி இது இலவசம் கிடையாது; பணம் கட்டனும், பரபர தகவல் - பயனாளர்கள் கலக்கம்!

ஷேர் வசதி

தற்போது beta பயனர்களால் சோதனை முறையில் சோதிக்கப்பட்டு வரும் நிலையில் இது விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு இரண்டு டிவைஸ்கள் இணைக்கப்பட வேண்டும்.

இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம்- போட்டோ, வீடியோவும் அனுப்பலாம்.. | Whatsapp Will Work Without Internet Details

இதனையடுத்து தொடர்பு எண்கள், போட்டோக்கள், வீடியோக்கள் என முக்கியமான டாக்குமெண்ட்களை ஷேர் செய்யலாம். இதற்கு இன்டர்நெட் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பவும் இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.