இனி வாய்ஸ் மெசேஜ்-லயும் அதை பண்ணலாம்; WhatsApp-ல் புதிய அசத்தல் வசதி - என்ன தெரியுமா..?

WhatsApp World Technology
By Jiyath Dec 08, 2023 06:21 AM GMT
Report

ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் வகையில் 'வியூ ஒன்ஸ்' (View Once) என்ற அம்சத்தை வாய்ஸ் மெசேஜஸ் ஆப்ஷனிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. 

புது அப்டேட்

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் புது புது அப்டேட்களை அந்நிறுவனம் கொடுத்து வருகிறது. கடந்த 2021ல், குறுந்தகவல்களை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் வகையில் 'வியூ ஒன்ஸ்' (View Once) என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது.

இனி வாய்ஸ் மெசேஜ்-லயும் அதை பண்ணலாம்; WhatsApp-ல் புதிய அசத்தல் வசதி - என்ன தெரியுமா..? | Whatsapp View Once Feature To Voice Messages

தற்போது இந்த அம்சத்தை வாய்ஸ் மெசேஜஸ் ஆப்ஷனிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதியை செயல்படுத்துவதன் மூலம் வாய்ஸ் மெசேஜ்களை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும். பின்னர் வாய்ஸ் மெசேஜ் சாட்-இல் இருந்து காணாமல் போய்விடும். மற்ற மெசேஜ்களை போன்றே வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி யாரும் அதை பண்ண முடியாது; WhatsApp-ல் புதிய அசத்தல் வசதி - என்ன தெரியுமா..?

இனி யாரும் அதை பண்ண முடியாது; WhatsApp-ல் புதிய அசத்தல் வசதி - என்ன தெரியுமா..?

எப்படி அனுப்புவது?

சாட் அல்லது க்ரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இனி மேல்புறமாக ஸ்வைப் செய்து ரெக்கார்டிங்-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

இனி வாய்ஸ் மெசேஜ்-லயும் அதை பண்ணலாம்; WhatsApp-ல் புதிய அசத்தல் வசதி - என்ன தெரியுமா..? | Whatsapp View Once Feature To Voice Messages

ரெக்கார்டு ஆப்ஷனை அழுத்திப்பிடித்து ரெக்கார்டு செய்ய வேண்டும் இனி 1 ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். 1 ஐகான் பச்சை நிறத்திற்கு மாறியதும் அது வியூ ஒன்ஸ் மோடில் இருப்பதாக அர்த்தம்.

இனி குறுந்தகவலை அனுப்ப செய்யும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த அம்சமானது வாட்ஸ்அப் செயலியில் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் அனைவருக்குமான இந்த அம்சம் ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.