இனி யாரும் அதை பண்ண முடியாது; WhatsApp-ல் புதிய அசத்தல் வசதி - என்ன தெரியுமா..?

WhatsApp World Mark Zuckerberg Technology
By Jiyath Dec 01, 2023 05:27 AM GMT
Report

வாட்ஸ்அப்பில் லாக்டு சாட் (Locked Chat) அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் (Secret Code) எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வசதி 

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் புது புது அப்டேட்களை அந்நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது லாக்டு சாட் (Locked Chat) அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் (Secret Code) எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி யாரும் அதை பண்ண முடியாது; WhatsApp-ல் புதிய அசத்தல் வசதி - என்ன தெரியுமா..? | Whatsapp Secret Code Feature Locked Chats

மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க், புதிய சாட் லாக் அம்சத்தில் சீக்ரெட் கோட் வசதி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அம்சத்தினால் பயனர்கள் தங்களது சாட்களை சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைத்துக் கொள்ள முடியும். இதனால், நீங்கள் உங்கள் போனை மற்றவர்களிடம் கொடுக்கும்போது, உங்களது முக்கியமான சாட்களை அவர்களால் முடியாது.

இனி யாரும் அதை பண்ண முடியாது; WhatsApp-ல் புதிய அசத்தல் வசதி - என்ன தெரியுமா..? | Whatsapp Secret Code Feature Locked Chats

வாட்ஸ்அப்பில் பரவிய அந்தரங்க வீடியோ; பதறிய தம்பதியினர் - 7 பேரைத் தேடும் போலீசார்!

வாட்ஸ்அப்பில் பரவிய அந்தரங்க வீடியோ; பதறிய தம்பதியினர் - 7 பேரைத் தேடும் போலீசார்!

லாக்டு சாட் 

மேலும் உங்களது சாட்களுக்கென தனி பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். கைரேகை அல்லது ஃபேஸ் ஐடி உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தலாம். சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைக்கப்படும் சாட்கள் அனைத்தும் மெயின் சாட் லிஸ்ட்-இல் காண்பிக்கப்படாது.

இனி யாரும் அதை பண்ண முடியாது; WhatsApp-ல் புதிய அசத்தல் வசதி - என்ன தெரியுமா..? | Whatsapp Secret Code Feature Locked Chats

செயலியில் பயனர் செட் செய்த சீக்ரெட் கோட்-ஐ பதிவிட்டால் மட்டுமே இயக்க முடியும். இந்த அம்சத்தினை உங்கள் வாட்ஸ்அப்பில் செட் செய்ய, செயலியின் சாட் - லாக் செட்டிங்ஸ் - ஹைடு லாக்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி சீக்ரெட் கோட்-ஐ செட் செய்ய வேண்டும்.