பனியில் சிக்கி துடித்த கர்ப்பிணி; வாட்ஸப் மூலம் பிரசவம் - ஆச்சர்ய சம்பவம்!

WhatsApp Pregnancy Jammu And Kashmir
By Sumathi Feb 13, 2023 07:18 AM GMT
Report

கர்ப்பிணி பெண்ணுக்கு வாட்ஸப் வீடியோ கால் வழியாக பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பனிப்பொழிவு

ஜம்மு காஷ்மீர், கெரண் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவ வலியுடன் வந்துள்ளார். அப்போது உடனடியாக அவர் குப்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பனியில் சிக்கி துடித்த கர்ப்பிணி; வாட்ஸப் மூலம் பிரசவம் - ஆச்சர்ய சம்பவம்! | Whatsapp Video Call Via Child Birth In Kashmir

ஆனால் கடும் பனிப்பொழிவால் தரை வழி மற்றும் ஹெலிகாப்டர் என எதிலும் அவரை அழைத்து போக முடியாத சூழல் நிலவியுள்ளது. இதுகுறித்து மாவட்ட துணை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசவம்

அதை தொடர்ந்து வாட்ஸப் வீடியோ கால் வழியாக மகப்பெறு மருத்துவர் பர்வைஸ், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி செயல்பட்டு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

அவசரகாலத்தில் வீடியோ கால் மூலமாக நடைபெற்ற இந்த பிரசவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.