சாலையிலேயே பெண்ணுக்கு பிரசவம் - சுமார் 2 கிலோ மீட்டர் கையில் குழந்தையை தூக்கி கொண்டு நடந்த தாய்

Pregnancy
By Nandhini Sep 23, 2022 03:57 PM GMT
Report

சாலையிலேயே பெண்ணுக்கு பிரசவத்தில் பிறந்த குழந்தையை சுமார் 2 கிலோ மீட்டர் கையில் தூக்கிக்கொண்டு தாய் நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்ப்பிணி பெண்

ஒரிசா மாநிலத்தில் துங்கால் கிராமம் ஒன்று உள்ளது. இக்கிராமத்தில் சாலை வசதி ஏதும் கிடையாது. மேலும், 2 நாட்களாக அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக உள்ளது. இந்நிலையில், துங்கால் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து, அவரது உறவினர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் அந்த கிராமத்திற்கு வருவதற்குள் சாலையில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது.

சாலையிலேயே பெண்ணுக்கு பிரசவம்

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். ஆம்புலன்சில் ஏறுவதற்காக கர்ப்பிணியும் அவரது உறவினர்களும் நடந்து வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, வரும் வழியில் கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி அதிகமாகி அந்த இடத்திலேயே அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு, பிறந்த பெண் குழந்தையை அவர் கையில் தூக்கிக் கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு நடந்தே சென்றுள்ளார்.

இதனையடுத்து, அந்த ஆம்புலன்ஸில் ஏறி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். தற்போது மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

odisha-pregnancy