இனி வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்சில் மியூசிக் - வெளியான அசத்தல் அப்டேட்
வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்சில் மியூசிக் வைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் தங்களது பயனர்களை கவர தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்டேட்டஸில் பாடல்களை பகிரும் வசதியை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மியூசிக் ஸ்டேட்டஸ்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பிரபல செயலியான இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியை பகிரும் போது அதில் விருப்பமான பாடல்களை சேர்த்துக் கொள்ளும் வசதி உள்ளது. அதே வசதி தற்போது வாட்ஸ்அப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பிரிவில் மியூசிக் பட்டன் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் போலவே மியூசிக் லைப்ரரி இதில் இருக்கும். இதில் தங்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்வு செய்து புகைப்படம் அல்லது வீடியோவுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
தற்போது பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியானது விரைவில் அனைத்து பயனாளர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.