இந்தியாவில் நிறுத்தப்படும் Whatsapp சேவைகள் - அதிர்ச்சி தகவல் சொன்ன மத்திய அமைச்சர்?
இந்தியாவில் Whatsapp மற்றும் Meta சேவைகளை நிறுத்தப்படவுள்ளதாக சில நாட்களாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நிறுத்தமா..?
Whatsapp மற்றும் அதன் தாய் நிறுவனமான Meta , இந்தியாவில் தங்கள் சேவைகளை நிறுத்தும் திட்டம் குறித்து அரசுக்கு எதுவும் தகவல்தெரிவிக்கவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்தியுள்ளார்.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர் விவேக் தன்கா எழுப்பிய கேள்விக்கு, இந்த பதிலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ளார். Whatsapp அல்லது Meta இதுபோன்ற திட்டங்கள் குறித்து அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பகிர்ந்துள்ளதாக தனது எழுத்துப்பூர்வ பதிலில் வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் பயனர் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அரசாங்க உத்தரவுகளின் காரணமாக, இந்தியாவில் WhatsApp செயல்பாடுகளை நிறுத்த விரும்புகிறதா என்பதைச் சுற்றியே ராஜ்யசபா எம்.பி தன்காவின் கேள்வி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ராஜ்யசபாவின் கேள்விக்கு பதிலளித்த வைஷ்ணவ், அரசாங்க உத்தரவுகளுக்கு மத்தியில் தனியுரிமை மற்றும் குறியாக்கம் பற்றிய கவலைகளை எடுத்துரைத்தார், அதன் மிகப்பெரிய சந்தையில் WhatsApp இன் தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதிசெய்தது.