இன்டர்நெட் இல்லாமல் Whatsapp ல் ஃபைல் அனுப்பும் வசதி - புதிய அப்டேட்
இன்டர்நெட் இல்லாமல் பைல்களை அனுப்பும் வசதி வாட்சப்பில் வர உள்ளது.
வாட்சப்
வாட்சப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2009 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த செயலியை 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் $19 பில்லியன் (இந்திய மதிப்பில் 1,14,000 கோடி) க்கு வாங்கியது.
இணையவசதி மூலம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, கால் பேசுவது முதல் பணப்பரிமாற்றம் செய்வது வரை பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணையம்
தற்போது இணையம் இல்லாமலே ஃபைல்களை அனுப்பும் வசதியை கொண்டு வரும் முயற்சியில் வாட்சப் இறங்கியுள்ளது. இந்த 'People Nearby' அம்சம் அருகில் உள்ளவர்களுடன் இணைய வசதி இல்லாமல் வாட்சப்பில் கோப்புகளை பகிர அனுமதிக்கிறது.
அதிக சைஸ் கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற பெரிய கோப்புகளை இணைய வசதி இல்லாத பகுதிகளில் பகிர இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அப்டேட் ஆண்டிராய்டு மற்றும் ios என அனைத்து தளங்களிலும் வர உள்ளது. ios பதிப்பில் ஃபைல் பரிமாற்றத்தை தொடங்க QR ஸ்கேன் செய்ய வேண்டி இருக்கும். இந்த அப்டேட் இன்னும் சில வாரங்களில் வெளி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.