இனி அலுவலகங்களில் வாட்ஸ்ஆப், பென் டிரைவ் பயன்படுத்த தடை - ஏன்?
அலுவலகங்களில் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பென் டிரைவ் தடை
ஜம்மு & காஷ்மீர் அரசு, அனைத்து நிர்வாகத் துறைகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர் அலுவலகங்களில் உள்ள அதிகாரப்பூர்வ கணினிகளில்
பென் டிரைவ்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை தரவுகளை பாதுகாக்கவும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
மேலும் வாட்ஸ்அப் போன்ற பொது தளங்களை அல்லது iLovePDF போன்ற ஆன்லைன் சேவைகளை அதிகாரப்பூர்வ, ரகசிய ஆவணங்களை பகிர அல்லது சேமிக்க பயன்படுத்தக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கியமான அரசு தகவல்களைப் பாதுகாக்கவும், தரவு மீறல்கள், மால்வேர் தாக்குதல்கள் ஆகியவற்றை தடுக்க எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.